சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சரத்குமார்,
“நல்லவர்கள் இணையலாம் என கமல் கூறியதால், சிறப்பான கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
கமலிடம் இருந்து நல்ல முடிவு வரும். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரே முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
அதிமுக பேசும் என காத்திருந்தோம். அவர்கள் பேசவில்லை. மரியாதை , விகிதாசாரம் உள்ளது என்று தான் அதிமுக., உடன் இணைந்து பயணித்தோம்., இப்போது இது இல்லை.” என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, இன்று கமல் முன்னிலையில், மக்கள் நீதி மையத்தில் இணைந்து கொண்டுள்ளார். அத்துடன், அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் கமல் அறிவித்துள்ளார்.





