ஜோன்சன் அன் ஜோன்சன் நிறுவனத்தின் ஒற்றை தடுப்பூசிக்கு அமெரிக்காவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பைசர் மற்றும் மொடேர்னா நிறுவனங்களின் 2 முறை செலுத்தும், தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்ற நிலையிலேயே, ஒரு முறை செலுத்தும் ஜோன்சன் அன் ஜோன்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மூன்று கட்ட பரிசோதனைகளின் போது, இந்த தடுப்பூசி நல்ல பயனளிப்பதாகவும், மோசமான தொற்று பாதிப்பை குணப்படுத்துவதில் 85 சதவீதம் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ஏனைய தடுப்பூசிகளை போல இவற்றை உறை வெப்பநிலையில் பராமரிக்கத் தேவையில்லை என்றும், சாதாரண குளிர்சாதன வெப்பநிலையே போதுமானது என்றும் கூறப்படுகிறது.
ஒருமுறை மட்டுமே செலுத்த வேண்டும் என்பதால் செலவு கணிசமாக குறையும் என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.