பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா நாளாந்த வேதனம் மற்றும் காணி உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொஸ்லந்தை நகரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தொழிலாளர் மத்திய நிலையத்தினால் இந்த போராட்டம் இன்று முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், மண்சரிவு ஏற்படும் அபாய பகுதியில் வசிக்கும் தங்களுக்கு பாதுகாப்பான பகுதிகளில் வீடுகளை அமைத்து தருமாறும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





