ஒன்ராரியோ உள்ளிட்ட மாகாணங்கள் இரண்டாவது தடுப்பூசி மருந்தளவை செலுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளின் இரண்டாம் கட்டச் செலுத்தல் செயற்பாடுகள் மேலும் நான்கு மாதங்கள் பின் தள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே மாகாணம் நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழுவுக்கும், மாகாண சுகாதாரத்துறை நிருவாகத்தினருக்கும் இடையில் கலந்தாலோசனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த ஆலோசனைகளில் தற்போது வரையில் இறுதியான தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை என்றும் உடனடி நெருக்கடிகளுக்கான தீர்வினை எட்டுவது தொடர்பிலேயே அதிகளவல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.