மியன்மார் அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக இருந்த ஆங் சான் சூகி மீது மேலும் சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தேர்தல் பிரசாரத்தின்போது தடைகளையும் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாகவும், அச்சத்தை உண்டாக்கியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அத்துடன், மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஆங் சாங் சூகியை அவரின் வழக்கறிஞர்கள் சந்தித்துள்ளனர்.
அதன் பின்னர் சூகி நல்ல உடல்நிலையுடன் உள்ளதாகவும், தனது வழக்கறிஞர்கள் குழுவை தொடர்ந்தும் காண வேண்டும் என்று கூறியதாகவும் அவரின் வழக்கறிஞர்கள் காணொளி மூலம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.





