ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினது அறிக்கை மல்வத்த மற்றும் அஸ்கிரிய ஆகிய பௌத்த மஹா பீடங்களின் பீடாதிபதிகளுக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையினை ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் ஹரிகுப்தா ரோஹணதீர மகாநாயக்கர்களுக்கு கையளித்தார் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் ஆகியோர் அந்த அறிக்கையினை பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.





