சிரியாவில் 2013இல் நடந்த இரசாயன ஆயுத தாக்குதலுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக, தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பிரான்ஸ் வழக்கறிஞர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
பாரிஸை தளமாக கொண்ட ஊடக மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அமைப்பு வேறு இரு அரசசார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது மிக முக்கியமானது என ஊடக மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் சிரியா தொடர்பான சர்வதேச தீர்ப்பாயத்தை அமைப்பதற்கான மேற்குலக நாடுகளின் முயற்சிகளை சீனாவும் ரஷ்யாவும் தடுத்து வருகின்றன.
பிரான்ஸ் ஆயிரக்கணக்கான சிரிய அகதிகளுக்குத் தஞ்சம் அளித்துள்ளது.
பிரான்ஸின் நீதிபதிகளுக்கு, உலகளாவிய ரீதியில் மனித குலத்திற்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை விசாரணை செய்வதற்கான ஆணையுள்ளமை குறிப்பிடத்தக்கது.





