தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று ஆரம்பமாகியுள்ளது.
அ.தி.மு.க சார்பில் இதுவரை 8 ஆயிரத்து 250 விருப்பமனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் ஒரேநாளில் நேர்காணலை நடத்தி முடிக்க அ.தி.மு.க திட்டமிட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்தியலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் நேர்காணல் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.