கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இரணைமாதா நகர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து நேற்று போராட்டத்தை ஆரம்பித்த நிலையில், இன்று இரணைதீவு பிரதான இறங்குதுறையிலும், இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்வதற்காக குழிகள் தோண்டப்பட்ட பகுதியிலும், போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேவேளை, இரணைதீவுப் பகுதிக்குச் செல்லும் மக்களிடம் சிறிலங்கா கடற்படையினர் அச்சுறுத்தும் விதமாக செயற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இரணைதீவுக்குச் செல்வதற்கு முன்னர், தேசிய அடையாள அட்டையை தம்மிடம் ஒப்படைத்துச் செல்ல வேண்டும் என்று சிறிலங்கா கடற்படையினர் உத்தரவிட்டுள்ளனர் என்றும் அங்குள்ள மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.