சீனாவில் எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் 40 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய சுகாதார ஆணையத்தின் நிபுணர் குழு தலைவர் ஷாங் நன்ஷான் (Shang Nanshan) கூறுகையில், ‘சீனாவில் கொரோனா பரவல் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் இங்கு கொரோனா தடுப்பூசி திட்டம் மந்தமாகவே செயற்படுத்தப்படுகிறது.
இருந்தாலும், எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் பொதுமக்களில் 40 சதவீதத்தினருக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்’ என கூறினார்.