கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு நான்கு மாதங்களின் பின்னரேயே இரண்டாவது மருந்தளவுக்கான தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக கனடிய நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.
இரண்டாவது கொரோனா தடுப்பூசியின் மருந்தளவைச் செலுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக கூடிய தேசிய ஆலோசனைக்குழு நீண்ட ஆராய்வின் பின்னர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு நான்கு மாதங்கள் இடைவெளியை தீர்மானித்தமைக்கான காரணங்களையும் ஆணைக்குழு கூறியுள்ளது.
அதன் பிரகாரம், அதிகளவானவர்களுக்கு முதற்கட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்தும் முகமாகவே குறித்த இடைவெளி தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




