ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில், சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, பல்வேறு நாடுகளின் தூதுவர்களையும் சந்தித்து பேச்சு நடத்தி வருகிறார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
நேற்று முன்தினம், பங்களாதேஷ், பிரேசில், தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களை சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது அரசியல், பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் கொண்டு வரப்படும் போது, அதனை எதிர்கொள்வதற்கு உறுப்பு நாடுகள் ஆதரவு தர வேண்டும் என்றும் இந்தச் சந்திப்புகளில் தினேஷ் குணவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.