ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணையைத் தோற்கடிப்பது தொடர்பாக, சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் பாலித கொஹன்ன, சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சருடன், பேச்சு நடத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் நீண்ட நேரம் நடந்த இந்தச் சந்திப்பின் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காக்கு முழுமையான ஆதரவை சீனா வழங்கும் என்று, சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் லூ சாவோஹியூ (Luo Zhaohui ) உறுதியளித்துள்ளார்.
கொரோனாவுக்குப் பிந்திய பொருளாதார நெருக்கடிகள், மீண்டெழுவதற்கான சவால்கள் குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது சிறிலங்காவுக்கு தொடர்ந்தும் பொருளாதார உதவிகளை அளிப்பதாகவும், சீன உதவி வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.





