ஒன்ராறியோ மார்க்கம் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய ஒருவரை வாகனத்தினால் மோதி, அவரது உயிரிழப்புக்குக் காரணமான பெண் ஒருவருக்கு வீட்டுக்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற இந்த விபத்துக்கு காரணமான 26 வயதுடைய பெண்ணுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த நீதிமன்ற விசாரணை மெய்நிகர் முறையில் நேற்று இடம்பெற்றது.
இதன் போது, குற்றவாளியாக காணப்பட்ட பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகள் தகுதி காண் அடிப்படையில் 12 மாத கால நிபந்தனை அடிப்படையிலான வீட்டுக்காவல் சிறைத்தண்டனையை நீதிபதி விதித்துள்ளார்.
அத்துடன், குறித்த பெண் வாகனங்களைச் செலுத்துவதற்கு 3 ஆண்டுகளுக்குத் தடைவிதித்துள்ள நீதிபதி, 100 மணி நேரம், சமூக சேவை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.





