தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும், பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்தநிலையில் ‛வளர்ச்சிமிகு தமிழகம் படைப்போம்’ என்ற பெயரில் பாமகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதனை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மெய்நிகர் முறையில் வெளியிட்டுள்ளார்.
பாமகவின் தேர்தல் அறிக்கையில், மாணவர்களுக்கு இலவச கல்வி, இலவச மருத்துவம், பூரண மதுவிலக்கு போன்ற முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.