பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு வெற்றி பெற்றுள்ளது.
இன்று காலை பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடிய போது, பிரதமர் இம்ரான் கான் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியது.
எனினும், வாக்கெடுப்பை புறக்கணித்து எதிர்க்கட்சி கூட்டணிகள் வெளிநடப்பு செய்துள்ளன.
இதனால், 342- உறுப்பினர்களை கொண்ட தேசிய சபையில் 178-வாக்குகளை பெற்று, ஆறு மேலதிக வாக்குகளால் பெரும்பான்மை பலத்தை பிரதமர் இம்ரான் கான் நிரூபித்துள்ளார்.





