ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிசேல் பச்லெட்டை கொழும்புக்கு அழைக்க சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா படையினருக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காகவே, மிசேல் பச்லெட்டை கொழும்புக்கு அழைக்க சிறிலங்கா அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கின்ற முக்கியமான நாடுகளின் பிரதிநிதிகளையும் சிறிலங்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும், அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் கூறியுள்ளார்.





