ஆளும் லிபரல் கட்சியானது கொரோனா தாக்கத்திலிருந்து முற்றாக மீளும் வரையில் தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுக்காது என்று அதன் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் சிறுபான்மையை எண்ணிக்கையைக் கொண்டிருக்கும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தலைமையிலான அரசாங்கம் பொதுத்தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுப்பதற்கான அதிகளவு வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்பட்டது.
அத்துடன் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் வகையிலான வரவுசெலவுத்திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு லிபரல் கட்சியானது தடுமாற்றத்தினை எதிர்கொள்ளும் என்றும் ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையிலேயே அக்கட்சியின் முக்கிஸ்தர் ஒருவரால் உடனடியாக தேர்தல் நடைபெறாது என்பது உறுதிபடத்தெரிவிக்கப்பட்டுள்ளது.