தமிழகத்தில் 3 ஆவது அணிக்கு சாத்தியமில்லை எனவும் , அங்கு எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது எனவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தி.மு.க கூட்டணியில் தொடர்வது தான் தமிழகத்திற்கு நல்லது எனவும் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீட்டில் தி.மு.க.வுக்கும் காங்கிரஸு க்கும் இடையே இழுபறி நிலை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி வைக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியது.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட அவர் தமிழகத்தில் மூன்றாவது அணி எதையும் சாதித்ததாக வரலாறு இல்லை. இதனால் கமல் உடன் கூட்டணி சேர்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை.
இந்தத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்காவிட்டால் காங்கிரஸின் இடத்தை பா.ஜ.க பெற்றுவிடும் என்பதை மறந்து விடாதீர்கள் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.





