சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளின் போராட்டங்களில் பெண்களும் பங்கெடுத்துள்ளனர்.
அந்தவகையில் டெல்லி சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் அமைந்துள்ள விவசாயிகளின் போராட்டக் களங்களுக்கு பெண்களே பொறுப்பேற்றுள்ளனர்
இது குறித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் உறுப்பினரும் வேளாண் தலைவர்களில் ஒருவருமான கவிதா குருகிராந்தி கூறுகையில் “பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில் விவசாயிகளின் போராட்டக் களத்தில் மேடையை கையாளுதல், உணவு, பாதுகாப்பு வழங்குதல் போன்ற பணிகளை பெண்களே மேற்கொள்கிறார்கள். சிங்கு எல்லையில் சிறிய பேரணி நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
மற்றொரு வேளாண் அமைப்பு தலைவரான குல்வந்த் சிங் சாந்து கூறும்போது “பெண்கள் தினத்தையொட்டி அரியானா, பஞ்சாப் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் பெண்கள் போராட்டக்களத்துக்கு வந்துள்ளனர் எனத் தெரிவித்தார்.