வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
சர்வதேச பெண்கள் தினமான இன்று, பெரும்பாலும் தாய்மார் பங்கேற்ற இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கறுப்பு சேலைகளை அணிந்தவாறு இந்தப் பேரணியில் பாதிக்கப்பட்ட தாய்மார் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்திற்கு அருகாமையில் ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணி, முல்லைத்தீவு நகரில் நிறைவடைந்துள்ளது.
இந்தப் பேரணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மதகுருமார், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் பொது மக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.