கிளிநொச்சி – அம்பாள்குளத்தில் இருந்து, இன்று பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அம்பாள் குளத்தின் கரையில் ஒதுங்கிய நிலையிலேயே இன்று காலை பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட பை ஒன்றில் காணப்பட்ட தேசிய அடையாள அட்டையைக் கொண்டு, உயிரிழந்தவர் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த, 37 வயதுடைய, ஆறுமுகம் திலகேஸ்வரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பெண்ணின் மரணம் தொடர்பாக, கிளிநொச்சி காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





