படைத்தரப்பினுள் நடைபெற்றதாக கூறப்படும் பாலியல் விடயங்கள் தொடர்பிலான பக்கச்சார்ப்பற்ற விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கன்சர்வேட்டிக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தற்போதைய நிலைமைகளில் விசாரணைகள் தொடர்பாக நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை என்றும் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம் தேசிய பாதுகாப்புச் சபையின் விசாரணைகள் விரைவில் நிறைவடையவுள்ளதோடு அதன் அறிக்கை எவ்வாறு பகிரங்கப்படுத்துவது என்பது தொடர்பில் இதுவரையில் எவ்விதமான கருத்துக்களும் வெளிப்படுத்தப்படவில்லை.





