ஆப்கானிஸ்தானில் எஞ்சியுள்ள 2,500 அமெரிக்கப் படையினரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானிக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்ரனி பிளிங்கன் எழுதிய கடிதத்தில், சமாதான முயற்சிகளுக்கு அவசரமாக அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது.
அமெரிக்கப் படைகள் மே மாதத்துக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்படும் என்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
அதற்கமைய, அமெரிக்கப் படைகளை அங்கிருந்து குறைக்கவும் அவர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
எனினும் அமெரிக்காவின் தற்போது பதவிக்கு வந்துள்ள ஜோ பைடன் அரசாங்கம், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை முற்றாக விலக்கும் முடிவு குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று கூறியுள்ளது.