மதுரை, யானைக்கல் பகுதியில் தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி மகாத்மா காந்தியின் சிலை மூடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையில் ஆங்காங்கே உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்நிலையில் அரசியல் தலைவர்கள் எனக் கூறி மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலையை தேர்தல் அலுவலர்கள் மூடியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேச தந்தை மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் வகையில் இது போன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் காந்தி சிலை அருகே இருந்த நேதாஜி சுபாஸ் சந்திர போசின் சிலையும் மூடப்பட்டிருந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து அவர்களே சிலையை மூடிய துணியை அகற்றியுள்ளனர்.





