டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டுள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய விவசாயிகள் போராட்டம் பற்றி, பிரித்தானிய நாடாளுமன்றத்தில், விவாதம் நடத்த வேண்டும்’ என, இணையம் வழியாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், விவாதிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அங்கு விவாதம் நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து லண்டனில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்ட அறிக்கையில், டில்லி விவசாயிகள் போராட்டம் குறித்து , பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பாரபட்சமாக விவாதம் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன், புதுடெல்லியில் உள்ள இந்தியாவுக்கான பிரித்தானிய தூதுவர், இந்திய வெளியுறவு அமைச்சுக்கு அழைக்கப்பட்டு, உள்நாட்டு பிரச்சினையில் தலையிட வேண்டாம் என்று, கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.





