கம்போடியாவில் இன்று முதலாவது கொரோனா தொற்று மரணம் பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகப் பெருந்தொற்றாக உலக சுகாதார நிறுவனத்தினால், பிரகடனம் செய்யப்பட்டு, இன்னுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது.
இந்த தொற்று நோயினால், உலகம் முழுவதிலும், 26 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், கம்போடியாவில் இன்று முதல் கொரோனா தொற்று மரணம் இடம்பெற்றுள்ளது,
கடலோர நகரான சிஹானுக் வில்லே ( sihanoukville) யில் அமைந்துள்ள சீன நிறுவமொன்றில் சாரதியாக பணிபுரிந்த 50 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த நபருக்கு கடந்த மாதம் தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் கெமர்-சோவியத் நட்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.