மொறிஷியசில், கொரோனா தொற்று பரவ ஆரம்பித்துள்ளதை அடுத்து, இரண்டு வாரகாலத்துக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 5 ஆம் நாளுக்குப் பின்னர், அங்கு புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொறிஷியசில், கொரோனா தொற்று ஏற்கனவே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதால், நாட்டில் தொடர்ந்து 2 வார காலத்திற்கு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக பிரதமர் பிரவின்ந் குமார் ஜக்னாத் (Pravind Kumar Jugnauth) அறிவித்துள்ளார்.
துறைமுகம், வானூர்தி நிலையம், மருத்துவமனை சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்டவை கட்டுப்பாடுகளுடன் செயற்படும் என்றும் பல்பொருள் அங்காடிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் அகரவரிசை சுழற்சி அடிப்படையில் இயக்கப்படும் என்றும் மொறிஷியசில், அரசு தெரிவித்துள்ளது.
வானூர்தி சேவைகளும் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.





