சீனா – பிரித்தானிய கூட்டுப் பிரகடனத்தைச் பீஜிங் மதித்து நடக்கவில்லை என பிரித்தானியா குற்றம் சுமத்தியுள்ளது.
ஹொங்கொங் தேர்தல் சீர்திருத்தத்தைத் துரிதப்படுத்தும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டிருப்பதைத் தொடர்ந்து பிரித்தானியா இவ்வாறு தெரிவித்துள்ளது.
ஹொங் கொங் எதிர்காலம் குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில் 1997 இல் ஹொங்கொங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டபோது கூட்டுப் பிரகடனம் கைச்சாத்திடப்பட்டது.
இந்நிலையில் தற்போது பீஜிங் அதை மீறியிருப்பது தெளிவாகத் தெரிவதாக தெரிவித்துள்ள பிரித்தானியா சட்டபூர்வமான கடமைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறும் சீனாவிடம் வலியுறுத்தியுள்ளது.