நீதிக்காகப் போராடும் சகோதரியின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, லண்டனில் 16 ஆவது நாளாக இன்று உணவு தவிர்ப்ர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவு தெரிவித்து கமல்ஹாசன் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “இன அழிப்புக்கு நீதி கிடைக்கக் கோரி லண்டனில் ஈழத்துச் சகோதரி அம்பிகை செல்வகுமார் பெப்ரவரி 27 முதல் உண்ணாநிலைப் போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.
நீதிக்காகப் போராடும் பெண்மணியின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும்.
சகோதரியின் போராட்டம் வெல்ல தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.