தமிழக தேர்தல் மதச்சார்பின்மைக்கும், மதவாதத்திற்கும் இடையிலான மக்கள் யுத்தம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது,6 வேட்பாளர்கள் என்பதைவிட 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தத் தேர்தல் களத்தில் இறங்குகிறோம்.
நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு அணிகளுக்கு இடையிலான பதவிக்கான போட்டி அல்லது அதிகாரத்திற்கான போட்டி என்று நாங்கள் பார்க்கவில்லை.
எந்த அணி ஆட்சியைக் கைப்பற்றுகிறது என்பதற்கான அதிகாரத்திற்கான போட்டி என்று நாங்கள் கருதவில்லை எனத் தெரிவித்துள்ளார்.