அல்பேர்ட்டாவில் இருவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டிலிருந்தே இந்த வைரஸ் காவி வரப்பட்டுள்ளதாகவும் உறுதியாகியுள்ளது.
இதேவேளை அல்பேர்ட்டாவில் இதுவரையில் 66பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதேநேரம் அங்கு 388பேருக்கு சாதாரண கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




