மியான்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று யங்கூன் நகரில் (Yangon) இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது, அரச படைகளும், காவல்துறையினரும் கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
இதன்போது, 38 பேர் உயிரிழந்தனர் என்றும், பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்தனர் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டும் செய்திகள் கூறுகின்றன.
அதேவேளை, 70 பேர் வரை கொல்லப்பட்டனர் என்று சுயாதீன வட்டாரங்களை மேற்கோள்காட்டி இரவாட்டி (Irrawaddy) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இன்றும் போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில், அரச படையினரும், காவல்துறையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் மக்களும், ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளதாக AP செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.