ஒன்ராரியோ மாகாணம் தற்போது மூன்றாவது அலை கொரோனா பரவலுக்கு முகங்கொடுத்துள்ளதாக வைத்தியசாலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உருமாறிய கொரோனா வைரஸின் பரலலே மூன்றாவது அலையில் இடம்பெறுவதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய நிலையில் பொதுசுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதே மாகாணத்தின் உடனடித் தேவையாக இருப்பதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தொற்றாளர்களின் எண்ணிக்கைகள் அதிகரிப்பதற்கு இடமளிக்க கூடாது என்றும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.





