ஒன்ராரியோவின் யோர்க் பிராந்தியத்தில் நாளை முதல் 75வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த தகவலை யோர்க் பிராந்தியத்தின் பொதுசுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கரீம் குர்ஜி (Karim Kurji) உறுதிப்படுத்தினார்.
தற்போதைய நிலையில் 80வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், தமது பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட விரைவுச் செயற்பாடுகள் காரணமாக அடுத்த கட்டத்தினை நோக்கி நகர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், இளமட்டத்தினரில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய தேவைகளைக் கொண்டிருப்பவர்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.




