ஒன்ராரியோவில் மூன்றாவது ஆலையின் தாக்கம் ஆரம்பித்து விட்டமாக தலைமை பொதுசுகாதார அதிகாரி வைத்தியர் டேவிட் வில்லியம்ஸ் (David Williams) தெரிவித்துள்ளார்.
இந்த மூன்றாவது அலையில் காணப்படும் கொரோனா வைரஸானது உருமாறிய கட்டமைப்பைக் கொண்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே மூன்றாவது அலையானது இரண்டாவது அலையை விடவும் அதிகமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த அலையின் விளைவுகள் தொடர்பில் முன்கூட்டியே கணிப்பிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.