வரும் 6ம் திகதி நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி 191 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள சமத்துமவ மக்கள் கட்சி 37 இடங்களிலும், இந்திய ஜனநாயக கட்சி 40 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 3 இடங்களிலும், ஏனைய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன.
இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்த, விருப்ப ஓய்வு பெற்ற மூத்த நிர்வாக சேவை அதிகாரி சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கீச்சகத்தின் பதிவிட்டுள்ள அவர், நாங்கள் டிஜிட்டல் முறையில் பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம். என்று கூறியுள்ளார்.