சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு, இந்தியா ஆதரவு அளிக்கும் என்ற அதிகபட்ச நம்பிக்கை தமக்கு உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து வெளியாகும் ஹிந்து ஆங்கில நாளிதழுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அளித்துள்ள செவ்வியிலேயே இதனைத் கூறியுள்ளார்.
“ஜெனிவா தீர்மானத்தின் மீது வாக்களிப்பதா அல்லது விலகியிருப்பதாக என்பதை இந்தியாவே தீர்மானிக்கும்.
ஆனால், தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும், வாக்களிக்க வேண்டும் என்பதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாகும்.
ஜெனிவாவில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக இந்தியா கருத்து வெளியிட்டுள்ள சூழலில், இந்தமுறை இந்தியா தொடர்பாக நாங்கள் அதிகபட்ச நம்பிக்கையுடன் இருக்கிறோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.