அமெரிக்கா எங்களை மீட்க வந்து கொண்டிருக்கிறது என்று ஒன்ராரியோ முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
கனடாவுக்கு ஒன்றரை மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்க அமெரிக்கா இணங்கியதன் பின்னரே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஹமில்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த போது கருத்து வெளியிட்ட டக் போர்ட், அமெரிக்காவை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவுக்கு ஒன்றரை மில்லியன் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை வழங்குவதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை அறிவித்தது.
இந்த தடுப்பூசிகள் யாவும் இந்த மாத இறுதிக்குள் கனடாவை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.