சீனாவில் உளவு பார்த்தார் என்ற குற்றம்சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனடியர்கள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள், வெளிப்படையற்ற முறையில் நடத்தப்படுவதற்கு கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
உளவு பார்த்த குற்றச்சாட்டில் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கும் எதிரான வழக்கு விசாரணை பீஜிங்கில் நேற்று தொடங்கியது.
இந்த விசாரணைகளை அவதானிக்க நீதிமன்றத்துக்குள் கனேடிய தூதரக அதிகாரிகள் அனுமதிக்கப்படவில்லை.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள கனேடிய பிரதமர், வெளிப்படையற்ற முறையில், இரகசியமாக, இந்த விசாரணைகள் நடத்தப்படுவதாக கூறியுள்ளார்.




