ஐஸ்லாந்தின் தலைநகர் ரேக்யாவிக் (Reykjavik) அருகே எரிமலை ஒன்று வெடித்துச் சிதற ஆரம்பித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவில் இருந்து எரிமலையில் இருந்து லாவா குழம்பு வெளியேறி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த எரிமலை 800 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது முதல்முறையாக வெடித்துள்ள போதும், பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை, அண்மைய சில வாரங்களில் ஐஸ்லாந்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.





