ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என, இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் மீது திங்கட்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், தமது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள, சிதம்பரம், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஐ.நா. பரிசீலனை செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
“மனித உரிமைகள் மறுக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் பிற சமூகங்களின் பக்கம் இந்தியா நிற்க வேண்டும்.
சிறிலங்காவில் தமிழர்கள் மீது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை சிறிலங்கா தொடர்ந்து ஏற்க மறுத்து வருவது வருத்தமளிக்கிறது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





