கிழக்கு அவுஸ்ரேலிய கரையோரப் பகுதிகளில் பெரும் வெள்ள ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடும் மழை பெய்து வருவதால், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை இந்த மாகாணத்தில் பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள மக்களை வீடுகளை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர்.
மேலும், தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அவசர நிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிட்னிக்கு வடக்கே உள்ள மீட்பு நிலையங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
பல இடங்களில் பிரதான வீதிகள் நீரில் மூழ்கியிருப்பதுடன், வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
சிட்னியை சுற்றியுள்ள அணைகளில் இருந்து நீர் நிரம்பி வழியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





