இரண்டாம் நிலை மாணவர்களுக்கு கடன் வழங்குவதற்கு பதிலாக மேலதிக கொடுப்பனவுகளை வழங்குமாறு என்.டி.பி.கட்சியின் தலைவர் ஜக்மீத சிங் தெரிவித்துள்ளார்.
சமஷ்டி அரசாங்கம் கொரோனா காலப்பகுதியில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட கடன் வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தியிருந்தது.
இதில் தற்போதும் சில திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இரண்டாம் நிலை மாணவர்கள் வட்டியைச் செலுத்துவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
ஆகவே அவர்களுக்கு மேலும் கடன்களை அளிப்பதை தவிர்த்து மேலதிக கொடுப்பனவுகளை சமஷ்டி அரசாங்கம் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.