ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பது என்று பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக, பாகிஸ்தான் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான வாக்கெடுப்பைத் தோற்கடிப்பதற்கான தீவிர முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
இதுவரை மேற்கொண்ட முயற்சிகளின்படி, ரஷ்யா பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா, உள்ளிட்ட நாடுகள் சிறிலங்காவுக்கு ஆதரவாக வாக்களிக்க இணங்கியுள்ளன.
மேலும் பல நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் தீவிர முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம், மனித உரிமைகள் பேரவையில் மூன்று ஆண்டு கால உறுப்புரிமைக்காக கடந்த ஜனவரி மாதம் மீளத் தெரிவான பாக்கிஸ்தான் சிறிலங்கா சார்பில் வாக்கெடுப்பினை கோருவதற்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை பெயர் குறிப்பிட விரும்பாத சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.