அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மியாமி கடற்கரை பகுதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வசந்த கால இடைவெளியில் ஏராளமான மக்கள் ஒன்று கூடுவதால் கொரோனா வைரஸ் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதனாலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரைக்கும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவின் போது போக்குவரத்து கட்டுப்படுத்தப்படுவதோடு, பரப்பரப்பான தென் கடற்கரை பகுதியில் வணிக நிலையங்கள் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





