வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் பெருமளவு கேரள கஞ்சா பொதிகளுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, 239 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது, கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளையும், சந்தேகநபர்களையும் சிறிலங்கா கடற்படையினர் பளை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.