இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், புதுச்சேரியில் அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி முதலாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 31 ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் குறித்த உத்தரவை மீறி சில பாடாசாலைகள் நடைபெற்று வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனையடுத்து கல்வி வாரியத் தேர்வெழுதும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.