குருநாகலில் பேருந்து தரிப்பிடத்துக்கு அருகே உள்ள உணவகம் ஒன்றில், வாழைப்பழத்தின் விலை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உணவகத்துக்குச் சென்ற ஒருவர், வாழைப்பழ சீப்பு ஒன்றின் விலையைக் கேட்ட போது, உணவகப் பணியாளர் ஒரு வாழைப்பழம் 30 ரூபா என்று கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த நபர், உணவகப் பணியாளரை, உடைந்த போத்தலால் குத்திக் கொலை செய்துள்ளார்.
இதையடுத்து, வாழைப்பழத்துக்காக, உணவக பணியாளரை போத்தலால் குத்திய நபரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.