இஸ்ரேலில் 4ஆவது முறையாக நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சத்துக்கும் மத்தியில், 87.5 சதவீத வாக்குகள் பதிவாகிய இந்த தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் (Benjamin Netanyahu) லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி 59 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
120 ஆசனங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில், ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்ற போதும், அந்த கூட்டணிக்கு பெரும்பான்மை பலத்துக்கு 2 ஆசனங்கள் குறைவாகவே கிடைத்துள்ளன.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், ஆட்சி அமைப்பது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
அதேசமயம் ராம் ( Raam) சிறிய அரபு கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், புதிய அரசை முடிவு செய்யும் கட்சியாக அது மாறியுள்ளது.
அந்தக் கட்சியின் தலைவர் மன்சூர் அப்பாஸ், யாருக்கு தனது ஆதரவு என்று இன்னும் அறிவிக்கவில்லை. அவர் எந்தக் கூட்டணிக்கும் ஆதரவு தெரிவிக்காவிட்டால் இஸ்ரேல் 5ஆவது பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது